பர்மிங்காம், ஜூலை 3:  இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா,  வங்கதேசத்திற்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில்,  அதிரடியாக விளையாடி 92 பந்தில் 104 ரன்கள் குவித்தார்.

நடப்பு தொடரில் இது அவருக்கு 4-வது சதமாகும். ஒருநாள் அரங்கில் இது அவரின் 26-வது சதமாகும். இதன்மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதம் அடித்த அணிகளில் ஆஸ்திரேலிய அணியை பின்னுக்கு தள்ளி, 30 சதங்களுடன் இந்தியா முதல் இடத்தை வசப்படுத்தியது.

இந்த போட்டியில் ரோஹித் அடித்த ஒரு சிக்ஸர் பந்து, மைதானத்தில் அமர்ந்திருந்த மீனா என்பவர் மீது பட்டது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இதை கவனித்த ரோஹித், போட்டி முடிந்த கையோடு, மீனாவை சந்தித்து நலம் விசாரித்ததுடன், அவரது கையெழுத்திட்ட தொப்பி ஒன்றையும் பரிசாக வழங்கினார்.