புத்தக மேம்பாட்டு மையத்தை மூடுவதா?: டாக்டர் ராமதாஸ்

சென்னை

சென்னை, ஜூலை 3: சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய புத்தகங்கள் அறக் கட்டளையின் புத்தக மேம்பாட்டு மையத்தை மூடக்கூடாது என்று மத்தியஅரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகளில் தேசிய புத்தக அறக்கட்டளை மிகவும் முக்கியமானதாகும்.
சென்னையிலுள்ள புத்தக மேம்பாட்டு மையத்தை மூட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

சென்னையில் இயங்கி வரும் புத்தக மேம்பாட்டு மையத்தை மூடும் முடிவை தேசிய புத்தகங்கள் அறக்கட்டளையும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் கைவிட வேண்டும். சென்னை மையத்தில் ஏற்கனவே பணியாற்றி வந்த தமிழ் தெரிந்த அதிகாரிகளை மீண்டும் பணியமர்த்தவும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.