செஸ்டர் லீ ஸ்டிரீட், ஜூலை 3:  நியூசிலாந்திற்கு எதிரான இன்றைய (41-வது) லீக் போட்டியில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பேட்டிங் செய்துவருகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. செஸ்டர் லீ ஸ்டிரீட்டில் உள்ள ரிவர்சைட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. இதில், டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிவருகிறது. இங்கிலாந்து அணியை பொறுத்தவரை எந்த மாற்றமும் செய்யாமல், இந்தியாவுக்கு எதிராக விளையாடிய அதே வீரர்களுடன் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது.

அதேசமயம், நியூசிலாந்து அணி சில மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. அந்த அணியின் முக்கிய பவுலரான பெர்குசனுக்கு தோள்பட்டை காரணமாக ஓய்வளிக்கப்பட்டள்ளது. அவருக்கு மாற்றாக டிம் சௌதி களமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், இஷ் சோதிக்கு பதிலாக மாட் ஹென்றியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நடப்பு தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ள பெர்குசன் இன்றைய நியூசிலாந்து அணியில் இல்லாதது, அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.