ரூ.90 லட்சத்தில் கழிவை அகற்ற ரோபோ இயந்திரம்

தமிழ்நாடு

சிதம்பரம், ஜூலை 4: சிதம்பரத்தில் கழிவுகளை அகற்ற நகராட்சி சார்பில் ரூ.90 லட்சத்தில் வாங்கப்பட்ட ரோபோ இயந்திரத்தை எம்எல்ஏ பாண்டியன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் துவக்கிவைத்தனர். சிதம்பரம் நகராட்சியில் ரூ.64 கோடியில் கட்டப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் பாதாள சாக்கடை கழிவுகளை மனிதனே அள்ளும் அவல நிலையைப் போக்க ரூ.90 லட்சம் செலவில் ரோபோ இயந்திரத்தை சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ பாண்டியன் மற்றும் நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா ஆகியோர் முன்னிலையில் நகராட்சி பணியாளர்கள் பயன்படுத்தி பணிகளை தொடங்கினார்கள். முதல்கட்டமாக சிதம்பரம் நகர நான்கு வீதிகளில் இருந்து இந்த பணி துவங்கப்பட்டது.

இதுப்பற்றி சிதம்பரம் நகராட்சி ஆணையாளார் சுரேந்திர ஷா கூறுகையில், எத்தனை கோடி மதிப்பிலான இயந்திரங்கள் பொருட்கள் வாங்கினாலும், வீட்டில் பொதுமக்கள் பாதாள சாக்கடை கழிவுகளுடன் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப் பின்களை அனுப்புவதால் தான் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை அனுப்புவதால் தான் பெரும்பாலான பாதாள சாக்கடை பணிகளில் தொய்வு ஏற்பட்டு ஆங்காங்கு அடைப்பு ஏற்படுகிறது.

இந்த விழிப்புணர்வு முதலில் வீடுகளில் இருந்து தான் துவங்க வேண்டும். பொதுமக்கள் சிதம்பரம் நகராட்சி பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு நகராட்சி ஆணையாளர் சுரேந்திர ஷா மேலும் கூறினார்.