சென்னை, ஜூலை 4: வாகன சோதனைக்கு ஒத்துழைக்காமல் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட டிரைவரை போலீசார் கைது செய்தனர்.  அமைந்தகரை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் குமார். இவர், கடந்த 2-ம் தேதி மாலை 6 மணியளவில் அண்ணா வளைவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தபோது, அந்த நபர் போலீசாரிடம் தகராறு செய்ததோடு, தனது பைக்கை நடுரோட்டில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

இது தொடர்பாக, அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, அரும்பாக்கத்தை சேர்ந்த டிரைவரான ஜோசப் என்கிற ரவீந்திரன் (வயது 54) என்பவரை கைது செய்தனர்.