மும்பை, ஜூலை 4: ஆர்எஸ்எஸ் தொடர்ந்து அவதூறு வழக்கில் ராகுல் இன்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. பெங்களுரில் 2017 செப்டம்பரில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து பேட்டி அளித்த ராகுல் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி கொள்கைக்கு எதிராக பேசுபவர்கள் தாக்கப்படுகிறார்கள். கொலை கூட செய்யப்படுகிறார்கள் என்றார்.

ராகுலின் இந்த குற்றச்சாட்டை ஆர்எஸ்எஸ் இயக்கத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்று கூறி அந்த இயக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஜோஷி என்பவர் மும்பை மாஜிஸ்திரே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஆஜராவதற்காக டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த ராகுலுக்கு நீதிமன்ற வாசல் வரை காங்கிரசார் கூடி நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் தாம் குற்றவாளி அல்ல என கூறினார். அதை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ராகுல் காந்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.இதே சம்பவம் தொடர்பாக ஆர்எஸ்எஸ்-யை குறை கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். சோனியா காந்தி மற்றும் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி மீது கூறப்பட்ட அவதூறு குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரித்தது.