ஸ்ரீதேவி கலை கல்லூரியில் புதிய மாணவர்கள் வரவேற்பு

சென்னை

செங்குன்றம், ஜூலை 4: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கல்லூரி குழும தாளாளர் கே.பச்சை யப்பன் தலைமை தாங்கினார். செயலா ளர் பி.ரமேஷ் முன்னிலை வகித்தார். செவிலியர் கல்லூரி தாளாளர் ஆர். ரமா வரவேற்றார். நிகழ்ச்சியில் தமிழக தமிழறிஞர் பேரவை பொதுச்செயலாளர் முனைவர் பேராசிரியர் எஸ், செல்வகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்கள் வெற்றி பாதையில் செல்ல நல்ல கருத்துக்களை விளக்கினார். துணை முதல்வர் மரியா லியோனி பமீலா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
கல்லூரி முதல்வர் வி.லட்சுமிபதி நன்றி கூறினார்.