புதுடெல்லி, ஜூலை 5: மத்திய பட்ஜெட்டில் பெண்கள், விவசாயிகள், இளைஞர்களுக்கு பல்வேறு சலுகைகளை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அளித்துள்ளார்.
மக்களவையில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் கூறியதாவது:-
புதிய இந்தியாவை உருவாக்க இந்த புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. வரலாற்றிலேயே அதிகமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பதிவானது. இளம் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் அதிக அளவில் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். தேசத்திற்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். தேசப்பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி என்கிற எண்ணத்தில் மக்கள் தீர்ப்பளித்தனர்.

கடந்த அரசில் அறிமுகம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி புதிய இந்தியாவிற்கு அடித்தளமிட்டது. சீரமைப்பு, செயல்பாடு மற்றும் மாற்றம் என்கிற அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தேசத்தை மத்திய அரசு வழிநடத்திச் செல்வதை மக்கள் அங்கீகரித்துள்ளனர்.
3 லட்சம் கோடி டாலர் இலக்கு:
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 2.7 லட்சம் கோடி டாலராக உயர்வு. இந்தியப் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்துவது சாத்தியம். 2.7 லட்சம் கோடி டாலராக இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். உலகின் 6-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது.
3 லட்சம் கோடி டாலர் எனும் அளவை நடப்பு நிதி ஆண்டில் கடக்கும். சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் முதலீடு அதிகரிக்கப்பட்டு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். விமான போக்குவரத்து துறையில் இந்தியா முதலீடு செய்யும்.

மெட்ரோ ரெயில் திட்டங்கள்:
300 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கும் உற்பத்திக்கும் மானியம் வழங்கப்படும். மின்சார வாகனங்களை ஊக்குவிக்க 3ஆண்டுகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு.
சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த ஆற்றுவழி போக்குவரத்து மேம்படுத்தப்படும். நாடு முழுவதும் பயணம் செய்ய ஒருங்கிணைந்த கட்டண முறையில் பயண அட்டை திட்டம். கங்கை நதியில் சரக்கு போக்குவரத்தை நான்கு மடங்கு அதிகமாக்க நடவடிக்கை.

மெட்ரோ ரெயில் திட்டங்கள்:
ஒரே நாடு ஒரே மின்தடம் எனும் திட்டத்தின் மூலம் மின் விநியோகத்தை வேகப்படுத்த முடிவு. அனைத்து ரெயில் தடங்களும் மின்மயமாக்கப்படும் வர்த்தகர்களுக்கான ஓய்வூதிய திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும். வருடத்திற்கு ரூ.1.5 கோடி வர்த்தகம் மேற்கொள்ளும். வணிகர்கள் 3 கோடி பேருக்கு ஓய்வூதிய திட்டம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை கடன் கொடுக்கும் திட்டம்.

உலக முதலீட்டாளர் மாநாடு:
காப்பீட்டு துறையில் 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும். நாடு முழுவதும் தொழில் நிறுவனங்களை தொடங்க உலக முதலீட்டாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்படும். விண்வெளி வர்த்தக வாய்ப்புகளை பயன்படுத்த இஸ்ரோவின் கீழ் புதிய நிறுவனம் உருவாக்கப்படும். 2022ம் ஆண்டுக்குள் ஊரக பகுதியில் உள்ள அனைத்து வீடுகளும் எல்பிஜி கேஸ் இணைப்பு.
அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்
நாடு முழுவதும் 1.95 கோடி வீடுகள் கட்டி உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படும். 2022க்குள் இந்தியாவில் மின்சார இணைப்பு இல்லாத வீடே இல்லை என்கிற நிலை ஏற்படும். பொருளாதார மேம்பாட்டிற்கு மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறை மிகவும் அவசியம் வேளாண்மைத்துறையிலும் தனியார் முதலீட்டை பெற நடவடிக்கை நாடு முழுவதும் விவசாயம் தொடர்புடைய 10 ஆயிரம் நிறுவனங்கள் உருவாக்கப்படும்.

மழை நீர் சேகரிப்பு திட்டம்:
மழை நீர் சேகரிப்பு திட்டம், நிலத்தடி நீரை உயர்த்தும் திட்டங்கள் ஊக்குவிக்கப்படும் நீர் மேலாண்மையை சரி செய்ய நாடு தழுவிய அளவில் இயக்கங்கள் நடத்தப்படும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நீர் சக்தி துறை அமைச்சகம் நீர் மேலாண்மையை மேற்கொள்ளும் ஊரக பகுதி மக்களுக்கும் சுத்தமான குடிநீர் விநியோகம் செய்ய திட்டங்கள் வகுக்கப்படும் வரும் காந்தி பிறந்த தினத்தில் திறந்தவெளி கழிவறைகள் இல்லாத நாடாக இந்தியா இருக்கும். புறநகர் ரயில்களின் சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் தனியார் – பொதுத்துறை கூட்டமைப்பில் மெட்ரோ திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்

புதிய தேசிய கல்விக் கொள்கை:
மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலான புதிய கல்விக் கொள்கை விரைவில் அமலுக்கு வரும். சர்வதேச அளவில் போட்டியிட இந்திய மாணவர்கள் தயாராகும் வரை உயர் கல்வித்துறையில் புதிய தேசிய கொள்கை

ஒரு கோடி இளைஞருக்கு பயிற்சி:
நாடு தழுவிய அளவில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும். உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்தியாவின் 3 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் கல்வி கற்றுக் கொள்ளுங்கள் எனும் இயக்கம் ஊக்கப்படுத்தப்படும்.
சுமார் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்படும் சர்வதேச அளவில் வேலை வாய்ப்பை பெறும் வகையில் இந்தியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைக்க தேசிய விளையாட்டு ஆணையம் பலதரப்பட்ட தொழிலாளர் நலச்சட்டங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்து சீராக்கும். புதிய தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்ட பிரத்யேக தொலைக்காட்சி சேனல் உருவாக்கப்படும். சாக்கடை கழிவுகளை அகற்ற ரோபோக்கள் மற்றும் எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

பெண்களுக்கு தலா ஒரு லட்சம் கடன்:
சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் வரை கடனுதவி மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும் மோசமான நிலையில் இருந்த 6 பொதுத்துறை வங்கிகள் மீட்கப்பட்டுள்ளன பொதுத்துறை வங்கிகளின் மேம்பாட்டிற்கு ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு நாட்டின் உள் கட்டமைப்பு துறையில் 5 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்படும்.

கோடீஸ்வரர்களுக்கு கூடுதல் வரி:
நேரடி வரி வருவாய் உயர்ந்துள்ளது. வீட்டு கடனுக்கான வரியில் சலுகை ரூ.1,5 லட்சம் சலுகை அளிக்கப்படும். குறைந்த பட்ஜெட் வீடு வாங்குவோருக்கு 1,5 லட்சம் வரி சலுகை அளிக்கப்படும். ஏற்கனவே இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தபடி ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வரிசெலுத்த வேண்டியதில்லை. ஆனால் கோடிடீஸ்வரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை உள்ளவர்களுக்கு 3 சதவீத சர்சார்ஜும் ரூ.5 கோடிக்கு மேல் உள்ளவர்களுக்கு 7 சதவீத சர்சார்ஜும் விதிக்கப்படும். ரூ, 1 கோடிக்கு மேல் வங்கிகளில் இருந்து ரொக்கமாக பணம் எடுத்தால் 2 சதவீத வரி விதிக்கப்படும்.
தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்களுக்கான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.1 உயர்த்தப்பட உள்ளது. பாதுகாப்புத்துறை தொடர்பான தளவாடங்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அதே போல, மின்சார வாகனங்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.