சென்னை,ஜூலை 5: சேலம் உருக்காலையை தனியார் மயமாவதை தடுக்க பிரதமர், துறை சார்ந்த அமைச்சரை அதிமுக, திமுக எம்பிக்கள் நேரில் சந்தித்து வலியுறுத்துவோம்,. மேலும் நாடாளுமன்ற இருஅவைகளிலும் இந்த விவகாரம் தொடர்பாக இணைந்து செயல்பாட்டு தடுக்க முயற்சிகள் மேற்கொள்வோம் என பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் .
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில்: அண்ணாவின் கனவு திட்டமான சேலம் உருக்காலை திட்டத்தை, கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தி அதன் அடிப்படையில் அப்போதைய பிரதமராக இருந்த இந்திராகாந்தி 1970 ஆம் ஆண்டு 4-வது ஐந்தாண்டு திட்டத்தில் அறிவித்து, அதை தொடர்ந்து நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழாவில் இந்திர காந்தியும் கலந்து கொண்டார்.

தொடர்ந்து லாபத்தில் இயங்கி வந்த இந்த உருக்காலை தற்போது நஷ்டத்தில் இயங்குவதால் தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு, அதன் அடிப்படையில் தற்போது பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளது. இதனை தடுத்த நிறுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். வேண்டுமென்றல் திமுக எம்பிக்களும் உங்களுடன் பிரதமரை சந்திக்க ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளோம்.

தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்: பொதுதுறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுப்பதில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு தான், அதிமுக நிலைப்பாடு கூட, உதாரணமாக பொதுதுறை நிறுவனமான என்எல்சி பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முன்வந்த போது, அந்த பங்குகளை வாங்கி காப்பாற்றியவர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.
சேலம் உருக்காலை விவகாரம் தொடர்பாக 15.2.2018 பிரதமரை சந்தித்து முதல்வர் நேரில் வலியுறுத்தி உள்ளார். அதே போன்று 2 முறை பிரதமருக்கு கடிதம் மூலம் சேலம் உருக்காலை தனியார் மயமாக்கவதை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என முதல்வர் வலியுறுத்தி உள்ளார். ஆகவே சேலம் உருக்காலை தனியார் மயமாவதை தடுக்க அரசு முயற்சி மேற்கொள்ளும், இந்த தனிமயத்திற்கு அரசு சிறதளவும் அனுமதி அளிக்காது.

அமைச்சர் தங்கமணி : மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், திமுக அங்கம் வகித்த போது தான் என்எல்சி 10 சதவீத பங்கை விற்பனை வந்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா டிட்கோ மற்றும் பல துறைகள் மூலம் அந்த பங்குகளை வாங்கி என்எல்சி நிறுவனத்தை ஜெயலலிதா காப்பாற்றினர். அப்போது திமுக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்: தனியார் மயக்கப்படுவதை அப்போது நாங்கள் எதிர்த்தோம், அதே நேரம் மத்திய அரசு உரிய அழுத்தம் திமுக சார்பில் கொடுக்கப்பட்டது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: தனியார் மயம் ஆவதை ஜெயலலிதா அரசு தடுத்து நிறுத்தும். எதிர்கட்சி தலைவர் சொன்னது போல தனியாருக்கு விற்பனை செய்வது தொடர்பாக டெண்டர் விளம்பரம் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. இதனை தடுத்த நிறுத்த பிரதமர், துறை சார்ந்த அமைச்சர்களை தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் விற்பனை செய்வது தவறான எண்ணம் மக்களிடம் ஏற்படுத்திவிடும். ஆகவே அதிமுக, திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் ஒன்றாக சேர்ந்து பிரதமர், துறை சார்ந்த அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்து வோம். அதே போன்று நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து தடுத்த நிறுத்த முயற்சி மேற்கொள்வோம். என்றார்.