சென்னை, ஜூலை 5: விற்று கொடுக்கும்படி கொடுத்த காரை அபகரித்த தனியார் கார் கம்பெனியைச்சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- அம்பத்தூர் அடுத்த பாடி பகுதியைச்சேர்ந்தவர் மாலதி (வயது36). இவர் கடந்த 2017 ம் ஆண்டு மதுரவாயிலில் உள்ள தனியார் கார் கம்பெனியில் தனது காரை விற்றுத்தரும்படி கூறி காரை ஒப்படைத்தாராம்.

ஆனால் தனியார் கம்பெனி நிறுவனம் அந்த காரை விற்றுக்கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மாலதி கார் விற்கவில்லை என்றால் க வரை கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் தனியார் கார் கம்பெனியின் நிறுவனர் காரை விற்று கொடுக்காமலும் ஏமாற்றி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து காரின் உரிமையாளர் மாலதி கொடுத்து புகார் தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடப்பாக்கத்தில் தலைமறைவாக இருந்த நிஜாம் (வயது 40), மணிமாறன் (வயது 40) இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.