சென்னை, ஜூலை 5: அத்திவரதர் தரிசனத்திற்காக ஜூலை 6 முதல் காஞ்சிபுரத்திற்கு 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
முதல் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து காலை 04.15 மணிக்கு புறப்பட்டு காலை 06.05 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும் இரண்டாவது சிறப்பு ரயில் சென்னை கடற்கரையிலிருந்து காலை 04.25 மணிக்கு புறப்பட்டு காலை 07.15 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும் மூன்றாவது சிறப்பு ரயில் செங்கல்பட்டில் இருந்து காலை 10.00 மணிக்கு புறப்பட்டு காலை 10.55 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும் நான்காவது சிறப்பு ரயில் செங்கல்பட்டில் இருந்து மதியம் 12.00 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.40 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும் ஐந்தாவது சிறப்பு ரயில் செங்கல்பட்டில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும் ஆறாவது சிறப்பு ரயில் செங்கல்பட்டில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.45 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும் அதே போல் காஞ்சிபுரத்தில் இருந்து 6 சிறப்பு ரயில்களின் விபரம் :-  முதல் சிறப்பு ரயில் காஞ்சிபுரத்தில் இருந்து காலை 07.30 மணிக்கு புறப்பட்டு காலை 08.20 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும் இரண்டாவது சிறப்பு ரயில் காஞ்சிபுரத்தில் இருந்து காலை 09.50 மணிக்கு புறப்பட்டு காலை 10.40 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்
மூன்றாவது சிறப்பு ரயில் காஞ்சிபுரத்தில் இருந்து பிற்பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும் நான்காவது சிறப்பு ரயில் காஞ்சிபுரத்தில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும் ஐந்தாவது சிறப்பு ரயில் காஞ்சிபுரத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் ஆறாவது சிறப்பு ரயில் காஞ்சிபுரத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.40 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும்