விழுப்புரம், ஜூலை 5: சேலம் மாவட்டம் மகேந்திரபுரி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 50). இவருடைய மனைவி புவனேஸ்வரி (45). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் தங்களது ஆம்னி காரில் சேலத்தில் இருந்து காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று அங்குள்ள அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

நேற்று விழுப்புரம் ஜானகிபுரம் புற வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த சமயத்தில் பலத்த காற்று வீசியதால் தீ கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. காரில் இருந்து புகை கிளம்பியதும் பாஸ்கரனும், அவரது மனைவி புவனேஸ்வரியும் கீழே இறங்கியதால் இருவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.