வாஷிங்டன், ஜூலை 6: அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் 7.1 ரிக்டர் அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாநிலத்தில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள ரிட்ஜ்கிரெஸ்ட் என்ற நகருக்கு அருகே மையமாக இருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகாக பதிவானது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.

இதே பகுதியில் நேற்று முன்தினம் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் அதைவிட கடுமையான நில நடுக்கம் ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். அவர்கள் கருத்தை உறுதி செய்யும் வகையில் தற்போது கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.