தாம்பரம் – கடற்கரை செல்லும் ரெயில்கள் ரத்து

சென்னை

சென்னை, ஜூலை 6: பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்லும் மின்சார ரெயில் சேவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை இடையே இரவு 11.30 மணி, கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு-கடற்கரை இடையே இரவு 10.15, 11.10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தாம்பரம்- கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.5 மணிக்கு மேல் செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் வரும் வெளியூர் பயணிகள் மற்றும் பணி முடிந்து செல்லும் பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாவார்கள்.