சென்னை, ஜூலை, 6: பெரம்பூரில் இளம்பெண் மின்விறியில் புடவையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பூர் திரு.வி.க.நகர் தீட்டி தோட்டம் 5-வது தெருவை சேர்ந்தவர் அர்ச்சுணன். இவரது மனைவி ரீதா. மகள் திவ்யபாரதி (வயது 28). திருமணம் ஆகவில்லை. பி.ஏ. பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் திருமணம் வேண்டாம் என்று பெற்றோரிடம் மறுத்து வந்துள்ளார். ஆனால் பெற்றோர் அவரை சமாதானம் செய்து திருமணம் செய்யுமாறு வலியுறுத்தனர். இந்த நிலையில் நேற்று பெற்றோர் வேலை விஷயமாக வெளியில் சென்றுவிட்டனர். அப்போது மாலையில் திவ்யபாரதி மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து பெரம்பூர் போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.