புதுடெல்லி, ஏப்.11:மக்களவைக்கு முதல் கட்டமாக இன்று 91 தொகுதிகளில் நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது.

பல்வேறு தொகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இத்துடன் ஆயுள் காலம் முடிகிற ஆந்திரா, அருணாசலப்பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் முதல் கட்டமாக 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஆந்திரா -25, அருணாசலபிரதேசம்-2, அசாம்-5, பீகார்-4, சத்தீஷ்கார்-1, காஷ்மீர் – 2 , மராட்டியம்-7, மணிப்பூர் -1, மேகாலயா -2, மிசோரம்-1, நாகலாந்து-1, ஒடிசா-4, சிக்கிம்-1, தெலுங்கானா-17, திரிபுரா-1, உத்தரபிரதேசம்-8, உத்தரகாண்ட்-5, மேற்கு வங்கம்-2, லட்சத்தீவுகள்-1, அந்தமான் நிகோபார் தீவுகள்-1 என 91 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 7.22 கோடி ஆண் வாக்காளர்களும், 6.99 கோடி பெண் வாக்காளர்களும், 7764 மூன்றாம் பாலினத்தவரும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.

ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களின் சட்டசபை தேர்தலும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

சட்டசபை தேர்தலை சந்திக்கும் மற்றொரு மாநிலமான ஒடிசாவில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற 4மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பல்வேறு தொகுதிகளில் காலை முதல் வாக்குச்சாவடிகளில் ஆண் களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். முதல் முதலாக வாக்களிக்கும் இளைய தலைமுறையினரிடமும் வாக்களிப்பதில் ஆர்வம் காணப்பட்டது. பகல் 1 மணி நிலவரப்படி சுமார் 50 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

மக்களவை தேர்தலில் முதல் கட்ட தேர்தலை இன்று சந்திக்கிற முக்கிய தலைவர்களில் உத்தரபிரதேசத்தில் இருந்து போட்டியிடும் மத்திய மந்திரிகள் வி.கே. சிங் (காசியாபாத்), மகேஷ் சர்மா (கவுதம புத்த நகர்), சத்யபால் சிங் (பாக்பத்), ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி தலைவர் அஜித் சிங் (முசாப்பர்நகர்) ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர். மராட்டிய மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற தலைவர்களில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி (நாக்பூர்), முன்னாள் மத்திய அமைச்சரும், க õ ங் கிர ஸ் தலைவருமான
சுஷில்குமார் ஷிண்டே(சே õலாப்பூர்) உள்ளிட்டவர்கள் அடங்குவர்.