சென்னை, ஜூலை 6: சென்னை வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் தங்கி கூலி வேலை செய்துவந்துள்ளனர்.
நேற்றிரவு இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று காலை வெகுநேரம் ஆகியும் யாரும் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, ஒருவர் காயங்களுடன் உயிரிழந்துகிடந்துள்ளார்.

தகவலறிந்துவந்த வேளச்சேரி போலீசார் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பிவைத்து, தப்பியோடிய 3 பேரை தேடிவருகின்றனர்.