லால் பகதூர் சாஸ்திரி சிலை: மோடி திறந்தார்

இந்தியா

வாரணாசி, ஜூலை 6: பிரதமரின் தொகுதியான வாரணாசியில் மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் உருவச்சிலையை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி விமான நிலையத்தில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் வாரணாசியில் பிஜேபியில் உறுப்பினர்களை சேர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். அதைத்தொடர்ந்து கங்கை நதிக்கரை ஆராதனை நிகழ்வில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.