சென்னை, ஜூலை 6:  தமிழ்நாடு பிரிமீயர் லீக் எனப்படும் டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டிக்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி வரும் (ஜூலை) 19-ம் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.  இந்தநிலையில், பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டிக்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறுதிப் போட்டி ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறுகிறது. பிளே-ஆப் சுற்றில் தகுதிச்சுற்று -1 மற்றும் வெளியேற்ற சுற்று போட்டிகள் ஆகஸ்ட் 11-ம் தேதியும், தகுதிச்சுற்று-2, ஆகஸ்ட் 13-ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.