பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காத்த சிறுவர்கள்

இந்தியா

ஜெய்ப்பூர், ஜூலை 6: கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள், அழுகுரல் கேட்டு பாலியல் பலாத்காரத்தில் இருந்து ஒரு சிறுமியை காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒதுக்குபுறமான பகுதியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது சிறுமி ஒருவரின் அழுகுரல் கேட்டுள்ளது. உடனே சிறுவர்கள் அங்குள்ள சிறிய குன்றின் பின்னால் சென்று பார்த்துள்ளனர்.

அங்கு சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கொண்டிருந்தார். உடனடியாக சிறுவர்கள் கிரிக்கெட் பேட்டால் அந்த காமுகனை தாக்கி போலீஸ் நிலையத்தில் கொண்டு ஒப்படைத்து உள்ளனர்.  இந்த தீரசெயலில் ஈடுபட்ட ஜவஹர் நகர் கச்சி பஸ்தி குடியிருப்பாளர்களான மனீஷ் (15), அமித் (18), ரோஹித் (18) மற்றும் படேல் (14) ஆகியோருக்கு கூடுதல் போலீஸ் இயக்குநர் பி.கே.சோனி நினைவுபரிசு மற்றும் சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினார்.