சென்னை, ஜூலை 7: திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப் படுவதாவது:- வேளச்சேரியை அடுத்த கோவிலம் பாக்கத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 32), ஆட்டோ டிரைவர். இவர் தனது தந்தை செல்வராஜ் என்பவருடன் வசித்து வந்தார். நேற்றிரவு வீட்டுக்கு வந்த அவர் தனி அறையில் படுத்து தூங்கியுள்ளார். அதிகாலை 2 மணியளவில் அவரது தந்தை எழுந்து பார்த்த போது சரவணன் தூக்கில் தொங்கியது தெரியவந்தது, இது குறித்த தகவலின் பேரில் பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் சில வருடங்களாக சரவணனுக்கு பெண் பார்த்து வந்ததாகவும், ஆனால் திருமணம் நடைபெறவில்லை என்ற ஏக்கத்தில் சரவணன் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.