ஹோனோலுலு, ஜூலை 7: விமானத்தில் சகபயணியிடம் போதையில் தகராறு செய்த பயணிக்கு ரூ.1.17 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஹவாய் மாகாண தலைநகர் ஹோனோலுலுவிலிருந்து, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவுக்கு, விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது, கியாங் சோல் கிம் என்ற பயணி, குடிபோதையில், சக பயணியரிடம் தகராறு செய்தார். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, விமானம் ஹோனோலுலுவுக்வே திருப்பப்பட்டது.

அங்கு, விமானத்திலிருந்து, கிம் வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டார். அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன், விமானம் திருப்பப்பட்டதற்காக, விமான நிறுவனத்துக்கு, 1.17 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, கிம்முக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.