காஞ்சிபுரம், ஜூலை 7: ஏழாவது நாளான இன்று விடுமுறை நாள் என்பதால் ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள் 5 கிலோ மீட்டர் அளவிற்கு நீண்ட வரிசையில் நின்று அத்திவரதரை சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் திருவிழாவில் ஏழாவது நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் 5 கிலோ மீட்டர் அளவிற்கு நீண்ட வரிசையில் நின்று அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து மினி பேருந்து மூலமாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கிழக்கு ராஜகோபுரம் அருகே இறக்கிவிடப்பட்டு அங்கிருந்து சாமி தரிசனம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்கள் அதிகப்படியாக கோவில் அருகில் வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

கடந்த 6 நாட்களாக 6 லட்சத்து 75 ஆயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் நேற்று ஒரே நாளில் அதிகப்படியாக ஒரு லட்சத்தி முப்பதாயிரம் பேர் அத்திவரதரை தரிசித்தனர். இன்றும் விடுமுறை நாள் என்பதால் 1.50 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது பெரும்பாலும் வெளியூர் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முதல் 500 ரூபாய் சிறப்பு கட்டணம் 500 பேர் மட்டுமே தரிசனம் நுழைவுச் சீட்டு வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்
மத்திய அமைச்சர் தரிசனம்: இன்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிஜேபி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் இன்று அத்திவரதரை தரிசித்தனர்.

கடந்த 4 நாட்களாக மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் இந்து அறநிலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நுழைவுச்சீட்டு விஐபி தரிசனம் அனைத்தும் இந்து அறநிலை துறை இடம் ஒப்படைக்கப்பட்டது.

பெரும்பாலும் இந்து அறநிலையத் துறைக்கு நன்கொடை வழங்கும் இயக்கிகள் நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேர் தரிசனம் செய்வதால் இலவச தரிசனத்தில் நீண்ட தூரம் நின்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் கோவில் அருகே வசந்த மண்டபத்தில் எழுந்தருளி நிற்கும் அத்தி வரதரை நின்று நிதானமாக சாமி தரிசனம் செய்ய முடியவில்லை விஐபிக்கள் உள்பிரகாரத்தில் அதிகப்படியாக இருப்பதால் அத்தி வரதரை சரியாக காண முடியவில்லை எனவும் சுவாமி தரிசனத்தை விடுமுறை நாட்களில் குறைத்தால் நன்றாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.