மும்பை, ஜூலை 7: மும்பையில் விதிமுறைகளை மீறி வாகனம் நிறுத்துபவர்களுக்கு ரூ.23 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

பிரஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் பராமரிக்கும் 26 பொது வாகன நிறுத்துமிடங்களுக்கு வெளியே வாகனம் நிறுத்தபட்டால்  நகராட்சி ஆணையர் பிரவீன் பர்தேஷி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களுக்கு வெளியே சட்டவிரோதமாக நிறுத்துவதைத் தடுப்பதே இதன் நோக்கம் என்று அவர் கூறினார்.

மும்பையில் 26 அங்கீகரிக்கப்பட்ட பொது வாகன நிறுத்தங்களை சுற்றி 500 மீட்டர் தூரத்திற்கு விதிமுறைகளை மீறி வாகனத்தை நிறுத்தினால், 5 ஆயிரம் ரூபாய் முதல் 23 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.