சென்னை, ஜூலை 7: அம்பத்தூரில் ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
அம்பத்தூர் திருவள்ளுவர் தெருவை சேரந்தவர் ஹரிதாஸ் (வயது 44) ஆட்டோ டிரைவர். நேற்று இரவு இவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டு இருந்தபோது அங்கு வந்த 5 பேர் கும்பல் அவரை பீர் பாட்டிலால் தாக்கியதுடன் அரிவாளால் வெட்டியாதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. படுகாயம் அடைந்த அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கவே பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
அந்த பகுதியில் உள்ள கோயில் ஒன்றின் நிர்வாகம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். ஆட்டோ டிரைவர் ஹரிதாஸ் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள 5 பேர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.