பெங்களூர், ஜூலை 7: கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்த இருகட்சிகளையும் சேர்ந்த 10க்கு மேற்பட்ட எம்எல்ஏகள் தங்களது ராஜினாமா கடிதங்களை நேற்று சபாநாயகரிடம் கொடுத்துவிட்டு இன்று காலை மும்பைக்கு விமானத்தில் சென்றனர்.
ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் செவ்வாய் கிழமைக்குள் முடிவு எடுக்க உள்ளார். இந்நிலையில் அமெரிக்கா சென்றிருந்த முதலமைச்சர் குமாரசாமி அவசரஅவசரமாக பெங்களூர் திரும்புகிறார்.

இந்த நிலவரம் குறித்து கர்நாடக பிஜேபி தலைவர் எடியூரப்பா மற்றும் இக்கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா ஆகியோர் கூறுகையில், தொகுதி நலனில் அக்கறை செலுத்தவில்லை என்பதற்காகவே எம்எல்ஏகள் ராஜினாமா செய்கின்றனர்.  கவர்னர் அழைத்தால் ஆட்சி அமைக்க பிஜேபி தயாராக இருக்கிறது என்றார்.