ஆக்ரா, ஜூலை 8: உத்தரபிரதேசம் மாநிலத்தில் பஸ் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விழுந்ததில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை ஈரடுக்கு பேருந்து ஒன்று ஐம்பது பயணிகளுடன் லக்னோவிலிருந்து புதுடெல்லி நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது யமுனா விரைவு வழிச்சாலையில் உள்ள கால்வாயில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து உள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர்.  உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு தனது வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தோருக்கு அனைத்து மருத்துவ வசதிகளையும் செய்யும்படி உத்தரவிட்டு உள்ளார்.