லண்டன், ஜூலை 8: இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் போது, இந்தியாவுக்கு எதிரான பேனர்களை விமானம் மூலம் பறக்க விடப்பட்ட சம்பவம் தொடர்பாக பிசிசிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்ற போது, ‘காஷ்மீருக்கு நீதி வேண்டும், படுகொலை நிறுத்தப்பட வேண்டும்’ என்பது போன்ற பேனர்களுடன் மைதானத்தின் மேலே விமானம் ஒன்று குறுக்கும் நெடுக்குமாக பறந்தது.

இந்த சம்பவம் குறித்து ஐசிசி நிர்வாகத்திடம் பிசிசிஐ புகார் தெரிவித்தது. மேலும் இதுகுறித்து ஐசிசி துணையுடன் பிசிசிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.

முன்னதாக கடந்த மாதம் 29-ம் தேதி பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியபோது மைதானத்துக்கு மேலே, ‘பலுசிஸ்தானுக்கு நீதி வேண்டும்’ என்ற பேனரை சுமந்தபடி விமானம் ஒன்று பறந்தது. இது குறித்து ஐசிசி கண்டனம் தெரிவித்தருந்த போதிலும் மீண்டும் இது போல நடந்திருப்பது குறித்து கடும் அதிருப்தியை இஙகிலாந்து காவல்துறையிடம் தெரிவித்தது.