மும்பை, ஜூலை 8: மும்பை பங்கு சந்தையில் இன்று சென்செக்ஸ் குறியீடு சரிவுடன் காணப்பட்டது.

இன்று மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவடைந்தது. காலை 11 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 616.31 புள்ளிகள் அதாவது 1,56 சதவீதம் சரிவடைந்து 38,895.71 புள்ளிகளாக காணப்பட்டது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடும் 196.15 புள்ளிகள் அதாவது 1,66 சதவீதம் சரிவடைந்து 11,615. புள்ளிகளாக காணப்பட்டது.