2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட ஆண்கள் ஜாக்கிரதை

சினிமா

ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இனணந்து தயாரித்துள்ள படம் “ ஆண்கள் ஜாக்கிரதை “ இந்த படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா,ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சிவகுமார் ஒளிப்பதிவு செய்ய, பாலகணேஷ் இசை அமைக்கிறார்.

சோழன் எடிட்டிங் செய்ய, கதை, திரைக்கதை, வசனம், எழுதி முத்துமனோகரன், இயக்குகிறார். படம் பற்றி இயக்குனர் கூறுகையில், இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம். அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களையும் தவறு செய்ய தூண்டும். அதனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. ஒரு ஆண் தவறு செய்தால் அந்த குடும்பம் மட்டும்தான் சிதையும். ஆனால் ஒரு பெண் தவறு செய்தால் சமுதாயமே பாதிக்கப்படும் என்ற கருத்தை சொல்கிறோம்.

இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் இது. ஒரு கோடிக்கு அதிகமாக செலவிட்டு 2000 முதலைகளை 15 நாட்களாக ஒரே இடத்தில் வைத்து சிரமப்பட்டு எடுத்தோம் என்றார்.