‘ஆடை’ எனது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை படம்: அமலா பால்

சினிமா

மேயாதமான் படத்திற்கு பிறகு ரத்னகுமார் இயக்கி உள்ள படம் ஆடை. இந்த படத்தில் அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய அமலாபால் கூறியதாவது:-

இப்படம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை நீண்ட பயணம் அழகிய பயணமாக இருந்தது. கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படம் படம் அவள் தியரிகியாகவோ, பாதிக்கப்பட்ட பெண்ணாகவோ அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறான் என்ற கருத்தில் உடன்பாடில்லாமல் படம் நடிப்பதையே விட்டுவிட முடிவு செய்திருந்த தருணத்தில் ஆடை படத்தின் கதையைப் படித்ததும் உற்சாகமாக ஒப்புக் கொண்டேன். இருப்பினும், படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது ஒரு சிறு தயக்கம் இருந்தது. உடனே இயக்குநரிடம் நாம் அனைவரும் ஒரு குழுவாக பணியாற்றினால் தான் இப்படம் சிறந்த படமாக வரும் என்று கூறினேன். அதை அவர் ஏற்றுக் கொண்டதால் அனைவரும் ஒன்றாக பணியாற்றினோம். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானதும் இது ஆபாச படமாக இருக்குமோ? என்று பல தலைப்பு போட்டு எழுதினார்கள். ஆனால் இப்படம் வெளியானதும் அனைவரின் பார்வையும் மாறும் என்று நம்புகிறேன். இந்த படம் எனது திரைவாழ்க்கையில் திருப்புமுனை படமாக அமையும் என்று நம்புகிறேன் என்றார்.

இயக்குநர் ரத்னகுமார் பேசும்போது:- இக்கதையை எழுதி முடித்ததும் எப்படி இயக்கப் போகிறேன் என்று இருந்த நிலையில், தயாரிப்பாளர் சுப்புவிடம் இக்கதையைக் கொடுத்துப் படிக்க கூறினேன். அவர் படித்துவிட்டு உடனே தயாரிக்க ஒப்பபுக் கொண்டார். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். அமலா பாலிடம் கதை கூறியதும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அமலா பாலுக்கு பிடித்திருந்தால் உயிரைக் கொடுத்து நடிப்பார். இப்படம் பெண்களின் அதிகாரத்தைப் பற்றி பேசும் படமாக இருக்காது என்றார்.