மும்பை, ஜூலை 8:  தொடர் மழை காரணமாக மும்பை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, மும்பையில் இருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஒரு வார காலமாக விடாது பெய்துவரும் தொடர் மழை காரணமாக மும்பை மற்றும் அதன் புறநகர் ஸ்தம்பித்து போயுள்ளது. இந்நிலையில் விமான நிலைத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதுடன், விமான நிலையம் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
விமான ஓடுதளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது, வெளிச்சம் மிக குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் மூடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கார், தானே, ராய்காட் பகுதிகளில் இன்றும் மழை பெய்து வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுவது, குறிப்பிடத்தக்கது.