காஞ்சிபுரம், ஜூலை 8: அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக வரும் 23-ம்தேதி பிரதமர் நரேந்திர மோடி காஞ்சிபுரம் வருகிறார்.

நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதரை லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அத்திவரதரை தரிசிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 23-ம் தேதி காஞ்சிபுரம் வருகிறார்.

அன்று சயன கோலத்தில் இருக்கும் அத்திவரதரை தரிசனம் செய்யும் பிரதமர், அன்றைய தினம் காஞ்சிபுரத்தில் தங்கி மறுநாள் காலையில் நின்ற கோலத்தில் எழுந்தருளும் அத்திவரதரை மீண்டும் தரிசிக்கிறார். பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பலர் காஞ்சிபுரம் செல்கின்றனர்.
மோடி வருகையையொட்டி காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு உள்ளது.

சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் ஹெலிபேட்டில் இறங்கும் மோடி, அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் கோவிலுக்கு செல்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி காஞ்சிபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன