ஜேஎஸ்பி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜேஎஸ் சதீஷ் தயாரித்திருக்கும் படம் ‘அசுரகுரு’. இதில் விக்ரம் பிரபு நாயகனாகவும், மஹிமா நம்பியார் நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பாகுபலி சுப்பாராஜ், யோகிபாபு, நாகிநீடு, ஜெகன், குமரவேல், மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைக்க, விசாரணை ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை, திரைக்கதை, எழுதி ராஜ்தீப் இயக்கி உள்ளார். சென்னை, உடுமலைப்பேட்டை, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசரை ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டார். இந்நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர், இம்மாத இறுதியில் அசுரகுரு திரைக்கு வரவுள்ளது.