சென்னை, ஜூலை 9:: அழகு நிலையம் வைத்து நடத்தி வரும் பெண்ணை தாக்கி நகையை பறித்துசென்ற 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

எம்ஜிஆர்நகர் பகுதியைச்சேர்ந்தவர் பிருந்தா (வயது31). இவர் சூளைப்பள்ளம் பகுதியில் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்றுமாலை அவரது அழகு நிலையத்திற்கு சென்ற 4பேர் கொண்ட கும்பல் பிருந்தாவை தாக்கியும், கத்தியால் வெட்டியும் அவர் அணிந்திருந்த 2 சவரன் செயினை பறித்து சென்றதாக அவர் போலீசில் புகார் கொடுத்தார்.

அந்த புகார் தொடர்பாக எம்ஜிஆர் நகர் இன்ஸ்பெக்டர் பிராங்க் ரூபன் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அதே பகுதியைச்சேர்ந்த திலிப்பனுடன் (வயது31), பிருந்தாவுக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும், கடந்த 2 வருடமாக பழகிய பிருந்தா திடீரென்று திலிப்பனுடன் பேச மறுத்து விட்டாராம்.

இதில் ஆத்திரம்அடைந்த தீபன் அவரது நண்பர்களான ஆர்.டி வேலு (வயது32), கோகுல் (வயது31), ஆனந்த் ஆகியோருடன் சேர்ந்த பிருந்தாவை தாக்கியும் கத்தியால் வெட்டியும் அவர் அணிந்திருந்த நகையை பறித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.