ஒரே படத்தில் கமல், ரஜினியை வைத்து இயக்க ஆசை: அக்ஷரா

சினிமா

கமலஹாசன் தயாரிப்பில், விக்ரம் நடித்திருக்கும் படம்கடாரம் கொண்டான். இப்படத்தினை தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். இதில் விக்ரமுடன் அக்‌ஷரா ஹாசன், நாசர் மகன் அபி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 19-ல் வெளியாக உள்ளது.

படம் குறித்து அக்ஷரா ஹாசன் கூறுகையில், நான் நடிப்பதை விட இயக்குனர் ஆவதையே விரும்புகிறேன். அப்பா இயக்கிய படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். கண்டிப்பாக அப்பாவை வைத்து படம் இயக்குவேன். ஆனால் அப்பா நடிப்பாரா எனத் தெரியாது.

ஏனென்றால் அப்பா வேறு எல்லா ஜானர்களிலும் படம் செய்து விட்டார். சூப்பர் ஹீரோவாகத் தான் படம் செய்யவில்லை அதனால் அவரை சூப்பர்ஹீரோ பாத்திரத்தில் நடிக்க வைக்க ஆசையா உள்ளது. மேலும் நடிகர் ரஜினியையும் தனது அப்பாவையும் ஒரே படத்தில் நடிக்க வைத்துஇயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்றார்.