சென்னை, ஜூலை 9:  12524 ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் ரூ.64 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் செயல்படுத்தப் படும் என சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தார். இந்த கிராமப்புறங்களில் விளையாட்டு குழு அமைக்கப்பட்டு கபடி, வாலிபால், கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு களம் அமைக்கப் படும் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக முதலமைச்சர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு:-
கிராமங்களில்உள்ளஇளைஞர்களின் ஆரோக்கியத்தையும், மனவளத்தையும் மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், இளைஞர்களின் விளையாட்டுத் திறனைஊக்குவிக்கவும், அதைவெளிக் கொணரவும் அம்மாவின் அரசால், நடப்புஆண்டில், 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில்மற்றும் 528 பேரூராட்சிகளில் 64 கோடியே 35 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் “அம்மாஇளைஞர் விளையாட்டுத் திட்டம்“” என்ற திட்டம் செயல்படுத்தப்படும்
.இத்திட்டத்தின் கீழ், அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் இருபாலருக்கும் தனித்தனியாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத் துறையால் “அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு””அமைக்கப்படும்.

ஒவ்வொரு கிராமத்திலும், கபடி, வாலிபால், கிரிக்கெட், கால்பந்து போன்ற ஏதேனும் மூன்று விளையாட்டுகளுக்குகளம் அமைக்கும் பணிகள், ஊரகப் பகுதிகளில், மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை உறுதித் திட்டத்தின் கீழும், பேரூராட்சிகளில்பேரூராட்சிகள்பொதுநிதியிலிருந்தும் மேற்கொள்ளப்படும். இளைஞர்களுக்கு போதிய பயிற்சி அளித்து, ஊராட்சிஒன்றிய, மாவட்டமற்றும் மாநிலஅளவிலான போட்டிகள்இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத் துறையால்நடத்தப்படும். வெற்றி பெறும் வீரர், வீராங்கனை களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் பரிசுகள்வழங்கப்படும்.
அனைத்து முக்கியமானசர்வதே சசாம்பியன்ஷிப் போட்டிகள்மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் சீனியர் மற்றும் ஜுனியர் பிரிவுகளில் பதக்கம் வெல்பவர்களுக்கும் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும்.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான முக்கியசர்வதேசவிளையாட்டுப் போட்டிகளில்பதக்கம் வெல்பவர்களுக்கும் உயரிய ஊக்கத் தொகைவழங்கப்படும்.  சென்னைநேருபூங்காஅருகில்உள்ளதமிழ்நாடுவிளையாட்டுமேம்பாட்டுஆணையத்தின் பழையதலைமைஅலுவலகக் கட்டடத்தைஇடித்துவிட்டு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் 12 ஆசிரியர் குடியிருப்புகள் 3.5 கோடி ரூபாய்செலவில்கட்டப்படும்.
மேலும் சைதாப்பேட்டையில் மாநில தகவல் ஆணையத்திற்கு ரூ.27.29 கோடி மதிப்பில் சொந்த கட்டிடம் கட்டப்படும்.

ஊராட்சிகளில் ஆடு வளர்ப்பை ஊக்குவிக்க நடப்பு ஆண்டில் ரூ.24.06 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் ரூ. 10 கோடி மதிப்பில் கால்நடை நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ஆய்வகம் அமைக்கப்படும். 100 கால்நடை மருந்தகங்களுக்கு அணிகலன்களுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்படும். உதக மண்டலத்தில் விந்தணுவில் பாலினம் பிரிக்கும் ஆய்வகம் ரூ.47.50 கோடியில் அமைக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.