சென்னை, ஜூலை 10:  கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து மக்கள் முன்னணியை சேர்ந்த நாராயணன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இது குறித்த அவரது புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நடிகரும், நாம் தமிழர் கட்சி பொறுப்பாளருமான மன்சூர் அலிகான், கைது செய்யப்பட்ட முகிலனுக்கு ஆதரவாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை தகாத வார்த்தையில் விமர்சித்ததுடன், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அமித்ஷாவை ஒருமையில் பேசினார்.

மேலும் மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசினார். எனவே, மன்சூர் அலிகான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.