மான்செஸ்டர், ஜூலை 10:  உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியின் இன்றைய ஆட்டத்தில் 240 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் 3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் இந்தியா-நியூசிலாந்து அணிகளிடையே நேற்று மான்செஸ்டரில் நடந்தது. மழையின் குறுக்கீடால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதையடுத்து, இன்று ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டு ஆட்டம் தொடர்ந்தது. அதன்படி, இன்றைய ஆட்டத்தில் பேட்டிங்கை தொடர்ந்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, 240 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி முதல் 3 ஓவர்களிலேயே 3 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறிவருகிறது. தொடக்கவீரர்கள் ரோஹித், கோலி, ராகுல் என அணியின் முக்கிய தலைகள் தலா ஒரு ரன்னுடன் நடையைக்கட்டியது, இந்திய ரசிகர்களை கலக்கமடைய செய்துள்ளது.