சென்னை, ஜூலை 10:  பட்டினப்பாக்கத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 23). இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு நேற்று திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.

நேற்று மாலை குழந்தையை காண்பதற்காக ரஞ்சித்குமார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், மாமியார் பச்சையம்மாள் குழந்தையை பார்க்க விடாமல் ரஞ்சித்குமாரை தடுத்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த ரஞ்சித், மாமியார் பச்சையம்மாளை பிளேடால் தாக்கியுள்ளார். இதில், பச்சையம்மாளின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்த புகாரின்பேரில், திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி, ரஞ்சித் குமாரை கைது செய்தனர்.