பொன்முடி எம்எல்ஏ மீதான விசாரணை ஒத்திவைப்பு

தமிழ்நாடு

விழுப்புரம், ஜூலை.11: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி எம்.எல்.ஏ., அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் ஆஜராகவில்லை.  இதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மோகன் உத்தரவிட்டார்.