பாடத்திட்டத்தில் சுதந்திர போராட்ட தலைவர்கள் வரலாறு

சென்னை

சென்னை, ஜூலை 11: சுதந்திர போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிப்படியாக பாடத்திட்டத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜன் பேசுகையில்: கேரளாவிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தை தனியாக பிரிப்பதற்காக மார்ஷல் நேசமணி பல்வேறு போராட்டங்களை நடத்தி, அதன்படி 1.1.1956ம் ஆண்டு தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. நேசமணியின் தியாகத்தை போற்றும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை அரசு பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுமா என்றார்.

அமைச்சர் செங்கோட்டையன்: தேசிய தலைவர் தியாகத்தை போற்று வகையில் அவர்களுது வாழ்க்கை வரலாற்று பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கு படிபடியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேசமணியின் வாழ்க்கை வரலாறும் அரசு பாடதிட்டத்தில் இடம் பெறும்.