சென்னை, ஜூலை 11:  கடந்த ஜூன் 10-ம் தேதி சேப்பாக்கம் லாட்ஜில் காதல் ஜோடி வந்து அறை எடுத்து தங்கியுள்ளனர். மறுநாள் வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த விடுதிமேலாளர் திருவல்லிக்கேணி போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். இதன்பேரில், விடுதி கதவை உடைத்து உள்ளே சென்று போலீசார் பார்க்கும்போது, காதலி உயிரிழந்த நிலையில், உயிருக்கு போராடிய காதலனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறி காதலனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சவுகார்பேட்டையை சேர்ந்த சுமர்சிங் (வயது 23) என்பதும், உயிரிழந்தவர் கல்லூரி மாணவி காஜல் என்பதும் தெரியவந்தது.

இருவரும் காதலித்து வந்த நிலையில், காஜலுக்கு வேறொரு நபருடன் நிச்சயதார்த்தம் முடிந்ததால், வீட்டை விட்டு வெளியேறிவந்த காஜலை அழைத்துக்கொண்டு சேப்பாக்கம் விடுதியில் தங்கியிருந்தபோது இருவரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும், அதில் காஜல் இறந்துவிட்டதாகவும், சுமர்சிங் போலீசில் தெரிவித்துள்ளார்.  ஆனால், பிரேத பரிசோதனை முடிவில், காஜல் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.