சென்னை,ஜூலை 11: கடந்த 8 ஆண்டுகளில் 507 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது அரக்கோணம் தொகுதி எம்எல்ஏ ரவி பேசுகையில்: அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணாபுரம் பகுதிகளில் விவசாயிகள் பம்பு செட்டுகள், அப்பகுதி கிராம மக்கள் குறைந்த அளவு மின்அழுத்ததால அவதிபடுவதாக என்னை சந்திக்கும் போது எல்லாம் முறையீடுகிறார்கள். ஆகவே அப்பகுதியில் 110 கேவி திறன் கொண்ட புதிய மின்மாற்ற அமைத்து தர வேண்டும்.

அதே போன்று எனது தொகுதியில் நெசவாளர்கள், விவசாயிகள் அதிகம் வசிக்ககூடிய பகுதியாக உள்ளது. அவர்களுக்கு சீரான மின்சாரம் வழங்க அப்பகுதியில்  33 கேவி திறன் கொண்ட புதிய துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆகவே அதனை விரைந்து முடித்து தர வேண்டும்.

அமைச்சர் தங்கமணி: உறுப்பினர் குறிப்பிட்டுள்ள பகுதியில் குறைந்த மின் அழுத்தம் உள்ளதாக குறிப்பிட்டார். இது தொடர்பாக ஆய்வு செய்தத்தில் போதுமான மின் பளு இருப்பதால், புதிய மின்மாற்றி அமைக்க வேண்டிய தேவை எழுவில்லை.

இருந்தபோதிலும் எதிர்காலத்தில் மின் தேவை கருத்தில் கொண்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த 8 ஆண்டுகளில் 507 புதிய துணை மின்நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடியார் ஆட்சியில் 179 புதிய துணை மின்நிலையங்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.