பண்ருட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி

சென்னை

சென்னை,ஜூலை 11: பண்ருட்டி தொகுதி அரசு மருத்துவ கல்லூரி அமைத்து தர அரசு முன்வர வேண்டும் என அத்தொகுதி எம்எல்ஏ சத்யா கோரிக்கை விடுத்துள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ சத்யா பேசுகையில்: எனது தொகுதியிலிருந்து 30 கி.மீ தொலைவில் விழப்புரம், கடலூர், நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம் என பக்கத்து தொகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது.

12-ம் வகுப்பு மாணவிகள் மேற்படிப்பை தொடராமல் பாதியில் படிப்பை கைவிடும் நிலை ஏற்படுகிறது. ஆகவே மாவட்ட வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இடம் உள்ளது, அங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து தர வேண்டும். மேலும் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரி வளாகத்தில் மருத்துவ கல்லூரி அமைக்கவும் அரசு முன் வர வேண்டும்.

அமைச்சர் கே.பி.அன்பழகம்: உறுப்பினர் தொகுதியில் அடங்கியுள்ள கடலூர் மாவட்டத்தில் 4 அரசு கல்லூரி, 1 அரசு உதவி பெறும் கல்லூரி, 1 பல்கலை உறுப்பு கல்லூரி, 6 தனியார் கல்லூரிகள் உள்ளன. இதில் ஓப்படைக்கப்பட்ட இடங்களில் சில கல்லூரிகளில் காலியாக உள்ளது.

ஆகவே எதிர்வரும் காலத்தில் தேவைக்கு ஏற்ப முதல்வர் கவனத்திற்கு கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மருத்துவகல்லூரி தொடர்பாக முதல்வர் பணிவுடன் பரிசீலினை மேற்கொள்வார். என்றார்.