சென்னை, ஜூலை 11: பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 40). இவர் அங்குள்ள 12 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் கும்பகோணம் சென்றுவிட்டு, பிப்ரவரி மாதம் வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த 27 சவரன் நகை திருடுப்போனது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிந்து, சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் கொள்ளையனை தேடிவந்த நிலையில், கொள்ளையனை நேற்றிரவு கைதுசெய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டை சேர்ந்த அனேஷ் குமார் (வயது 25) என்பதும், பிளம்மராக வேலை பார்த்துவரும் இவர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள வீடுகளில் பிளம்மராக வேலை பார்த்தபோது, அந்த பகுதிகளில் இருந்த 8 வீடுகளில் கைவரிசை காட்டியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

அவரிடம் இருந்து 41 சவரன் நகை, ரூ.25, 000 ரொக்கம் பணமும் மீட்கப்பட்டது.