சிதம்பரம், ஜூலை 11: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்று வரும் ஆனித் திருமஞ்சன தரிசன விழா ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவையொட்டி நடராஜர் கோவிலில் தினமும் ஆறு கால பூஜை கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு கால பூஜையின்போது நடராஜருக்கு வெள்ளியிலான அலங்கார அடுக்கு தீபாராதனை காட்டப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பக்தர்கள் பலர் நன்கொடையாக அளித்த பணத்தில் இருந்து மூன்று கிலோ தங்கத்தில் ரூ. 90 லட்சம் செலவில் செய்யப்பட்ட தங்கத்திலான ஏழு அடுக்கு அலங்கார தீபம் கோவில் பொது தீட்சிதர்களிடம் வழங்கப்பட்டது, இந்த தீபத்தை பொது தீட்சிதர்கள் நடராஜர் சந்நிதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து நடராஜருக்கும் சிவகாமசுந்தரி அம்மனுக்கும் தீபாராதனை செய்தனர்.