காபூல், ஜூலை 11:  ஓட்டலில் பெண் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதாக, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் அப்தாப் ஆலம் ஒரு வருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆப்கான் அணியில் பங்கேற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் அப்தாப் ஆலம், அணி வீரர்கள் தங்கியிருந்த சவுத்தாம்டனில் உள்ள ஓட்டலில், பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக அவர் மீது புகார் எழுந்தது.

இது தொடர்பாக, ஆப்கான் கிரிக்கெட் அணியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நடத்திய விசாரணையில், வீரர்களின் நடத்தை விதிகளை மீறி அவர் செயல்பட்டது உறுதியானதையடுத்து, அவர் ஒரு வருடத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், அவர் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடமாட்டார் என்று ஆப்கான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.