சிதம்பரம், ஜூலை 11: சிதம்பரம் காஸ்மோ பாலிட்டன் லயன்ஸ் சங்கம் பதவியேற்பு விழாவில் மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை,மற்றும் இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உள்ள ஹைடெக் ஹாலில் அரிமா சங்கம் சார்பில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இந்த விழழாவில் அரிமா சங்கத்தின் புதிய தலைவராக மணிகண்டனும், செயலாளராக இளஞ்செழியனும் பொருளாளராக பாலசுப்பிரமணியன் ஆகியோர் புதிதாக பதவி ஏற்றுக் கொண்டனர் . பதவி ஏற்பு விழாவின் சேவை திட்டமாக 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து 6 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, 6 நபர்களுக்கு கண் கண்ணாடியும் 8 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரமும் அரசு கல்லூரி விடுதிக்கு பீரோ ஒன்றும் நூலகத்திற்கு அலமாரியும் இலவசமாக வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் காஸ்மோ பாலிட்டன் லயன்ஸ் நிர்வாகிகள் முருகப்பன், சுரேஷ் நீலகண்டன், அகர்சந்த் சோரடியா, விஜயகுமார் தாலேடா, கமல் கிஷோர், ராஜசேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.திருச்சி முன்னாள் கவர்னர் சீனிவாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.