போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சென்னை

திருத்தணி, ஜூலை 11: திருத்தணியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு. மத்திய மாநில அரசுகளை கண்டித்து  திருவள்ளூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சாலை போக்குவரத்து சட்டம் 2017 அமல் படுத்துவதை கைவிட வேண்டும், பெட்ரோல், டீசல், சபையல் எரிவாயு  சிலிண்டர் விற்பனை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வர வேண்டும்,
டோல் கேட்டுகளில் வாகன கட்டணம் குறைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் திருத்தணியில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில்  போக்குவரத்து தொழிளாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் தவறிய மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.